Directed by : Selva
Starring : Ajith Kumar , Sanghavi
Music Director :Bala Barathi
Watch Song :
Song Lyrics :
தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
பூலோகம் என்பது பொடியாகிப் போகலாம்
பொன்னாரமே நம் காதல் பூலோகம் தாண்டி வாழலாம்
ஆகாயம் என்பது இல்லாமல் போகலாம்
ஆனாலுமே நம் நேசமே ஆகாயம் தாண்டி வாழலாம்
கண்ணீரில் ஈரமாகி கறையாச்சு காதலே
கரை மாற்றி நாமும் இல்லை கரை ஏறவேண்டுமே
நாளைவரும் காலம் நம்மைக் கொண்டாடுமே
தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
சில்வண்டு என்பது சில மாதம் வாழ்வது
சில்வண்டுகள் காதல் கொண்டால் செடியென்ன கேள்வி கேட்குமா
வண்டாடும் காதலைக் கொண்டாடும் கூட்டமே
ஆணும் பெண்ணும் காதல் கொண்டால் அது ரொம்பப் பாவம் என்பதா
வாழாத காதல் ஜோடி இம்மண்ணில் கோடியே
வாழாத பேர்க்கும் சேர்த்து வாழ்வோமே தோழியே
வானம் மண்ணும் பாடல் சொல்லி நம் தேரிலே
தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
இந்த பந்தம் இன்று வந்ததோ
ஏழு ஜென்மம் கண்டு வந்ததோ
உலகம் முடிந்தும் தொடரும் உறவிதுவோ
தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடுமலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
Tajmahal Thevaiillai Super Hit Song from Amaravathy (1993)
Reviewed by Tamizhmagan
on
4:55 PM
Rating:
No comments: